தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

Photo of author

By Parthipan K

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள்.

தீபாவளி பண்டிகை புராணம்:

நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். இவன் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்.
திருமால் வராக அவதாரம் பூமியை தொலைத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது அவரின் பரிசுத்தர் பூமாதேவிக்கு பிறந்த மகன். நரகாசுரன் அசுரவதத்தின் போது பிறந்ததால் அசுர சுபாவம் அவனுக்கு இயல்பாக இருந்தது. இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்கள் கொடுத்த வந்தான்.

அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்பதால் தாயைத் தவிர வேறு யாராலும் கொள்ள முடியாத வரம் பெற்று இருந்தான். இதனால் மகாவிஷ்ணு ஒரு நாடகம் நடத்தினார். நரகாசுரனுடன் போரிட்டு தன் மீது அம்புகளை வாங்கிக் கொண்டு அவர் மயங்கமடைந்தார் போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தியபாவம் கோபமடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.

சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் நரகாசுரன் போர் செய்து அன்னையின் அம்புக்கு பலியாகினான்.அப்போது தான் அவனுக்கு தான் போரிட்டது தன் தாயுடன் என்று அறிந்தான். அப்போது அவன் தன் தாயிடம் அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இந்த நாளை தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது என கிருஷ்ண லீலை புராணம் கூறுகிறது.