தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

0
98

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.

தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

 

யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, மற்றும் தொழில் முன்னேற்றம், திருமண தடை விலகல், சொத்துக்கள் சேரும்.

நமது முன்னோர்கள் மகாலய பட்சத்தில் பூலோகத்திற்கு வருவார்கள். நாம் அவர்களுக்கு மகாளய அமாவாசை அன்று திதி கொடுப்பது வழக்கம். அவர் வந்து மீண்டும் திரும்பி செல்பவர்களுக்கு வெளிச்சம் காட்டுவது தான் யம தீபம்.

வீட்டின் உயரமான பகுதியில் தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். இந்த தீபத்தை வீட்டின் நிலை வாசப்படியில் உட்புறமாக இருந்து ஏற்ற வேண்டும். தீபத்திற்கு பயன்படுத்திய எந்த பொருட்களையும் திரும்ப வீட்டிற்குள் எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடாது.

விளக்கை ஏற்றும் போதும் எடுக்கும் போதும் உட்புறமாக இருந்தே செய்தல் வேண்டும் விளக்கு தானாக எரிந்து அணைய வேண்டும்.இந்த தீபத்தை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் ஏற்றலாம். மேலும் கர்ப்பிணிகள், உடல் வலி உள்ளவர்கள், நோய் மற்றும் காயமடைந்தவர்கள், புதிதாக திருமணமானவர்கள் கண்டிப்பாக ஏற்றக்கூடாது.

author avatar
Parthipan K