ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்ந்து வருகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் ஐந்து மடங்கு மேல் கட்டணம் உயர்ந்துள்ளது.இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் தீபாவளியையொட்டி வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ஐந்து முதல் ஆறு மடங்கு வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் உயர்வால் வெளிமாவட்டங்களில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்து பணியாற்றுவோர் பலமடங்கு கட்டணம் கொடுத்து அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கட்டண உயர்வு போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தெரிந்து நடந்திருந்தால் அது ஊழல்,தெரியாமல் நடந்திருந்தால் அவை நிர்வாகமின்மை ,ஒட்டுமொத்தமாக இது நிர்வாக சீர்கேடு என கன்னடம் தெரிவித்துள்ளார்.