தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் அவர்கள் எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடமல் இருந்தனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது அதனால் மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் பண்டிகை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருகின்றனர்,ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.இதனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அவை தாம்பரத்தில்லிருந்து நெல்லை மற்றும் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.தாம்பரத்தில் இருந்து நெல்லை இடையே வண்டி எண் 06021தாம்பரத்தில் இருந்து நாளை இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நெல்லை சென்றடையும்.
மேலும் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் வண்டி எண் 06022நெல்லையில் இருந்து 21 ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகின்றது.