இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு!
கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பட்டாசு மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி ,விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கும் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாகவும் காற்று மாசுப்படுதல் போன்றவைகளை தடுக்க தீபாவளி அன்று இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் ரூ 200 அபராதமும் விதிக்கப்படும் என நகர அரசின் சுற்றுசூழல் துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த தடையை அமல்படுத்த 408குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து டெல்லி அரசின் பட்டாசு தடை உத்தரவை கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா தலைமையில் பாஜக கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர் கூறுகையில் டெல்லி முதல்வர் இந்துக்களின் பண்டிகைகளை தொடர்ந்து குறிவைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.மேலும் டெல்லி அரசு பசுமை பட்டாசுகளை மட்டுமாவது வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.