மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது.அதனால் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.மேலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் எக்ஸ்பிபி என்ற பிஎப் 7வகை வைரஸ் வேகமாக பரவி வருகின்றது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்க விடுத்துள்ளது.மேலும் சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்று மற்றொரு அலை ஏற்படுத்தவேண்டும்.மேலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகள் கேளிக்கை விடுதிகள் ,மால்கள் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.தற்போது ஒருசிலர் மட்டுமே முககவசம் அணிகின்றனர்.அதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.