சித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை!

0
148

சித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை!

செங்கல்பட்டு சித்திரவாடியில் 10 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பம் விழுந்து பலியான சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் அந்த சிறுமியுடன் புதைக்கப்பட்ட இடத்தில்தோண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கடந்த ஐந்தாம் தேதி சிறுமி வீட்டில் வந்து விளையாடு கொண்டிருந்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தில் பழுது பார்ப்பதற்காக மின்சார வாரியர் ஊழியர் ஏறிய போது மின் கம்பம் முழுவதும் சேதமடைந்த நிலையில் கீழே விழுந்தது இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி கடந்து 14ஆம் தேதி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டிருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

அந்த இடத்தில் எலுமிச்சை, குங்குமம், மஞ்சள் தூள் மற்றும் தலைமுடி இருப்பதைக் கண்டு பதற்றம் அடைந்தனர். அவர்கள் அவர்களிடம் குழந்தையை சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் காவல் துறையின் இதற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழியை தோண்டிய போது சிறுமியின் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் சூரிய கிரகணம் என்பதால் மர்ம நபர்கள் தலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleதேவர் ஜெயந்தி தங்க கவசத்தை தர மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்த அதிரடி முடிவு!
Next articleபாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!