தேவர் ஜெயந்தி தங்க கவசத்தை தர மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்த அதிரடி முடிவு!

0
107

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு நடுவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் தொடர்பான விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தங்கக் கலசத்தை இருதரப்பினரிடமும் தர மறுத்துவிட்டார். அதோடு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் நேற்று அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் தேவர் திருவுருவச் சிலைக்கு தங்க கவசம் அனுப்பிப்பதற்காக மதுரை வங்கியில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் தங்க கவசத்தை மாவட்ட வருவாய்த் துறையினர் பசும்பொன் கிராமத்திற்கு எடுத்து வந்தனர். அதன் பிறகு தேவர் திருவுருவை சிலைக்கு தங்க கவசம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.