அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

0
227

அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அமுல் கேரக்டருடன் நடை போடும் ரிஷி சுனக்! வாழ்த்தும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் அமுல் நிறுவனமும் அவரை பாராட்டும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த சிறப்பு டூடுலில் அமுலின் ஆஸ்தான கேரக்டருடன் ரிஷி சுனக் லண்டன் நகரில் நடந்து செல்வது போன்று வரையப்பட்டுள்ளது.

மேலும் அந்த டூடுலில் ரிஷி சுனக் பிரைம் மகான் என்று எழுதப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் அனைத்து எழுத்துக்களும் நீல நிறத்தில் இருந்தாலும் யுகேடிஎம் என்னும் எழுத்துக்களை சிவப்பு நிறம் கொண்டு ஹைலைட் செய்யப்பட்டுள்ளது தான்.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமரை வரவேற்கிறேன் என்று தலைப்பிட்டு அமுல் நிறுவனம் பகிர்ந்துள்ள இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பதிவை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

Previous articleபிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்‌ஷன்!
Next articleவிஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here