தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி!
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமைக்கு உரியவர் பலபாய் படேல்.அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி தான் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது.அவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என்று சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு சவாலாக இருந்த சமயத்தில் அந்த பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிகானிர், பாட்டியாலா மற்றும் குவாலியர், பரோடா முதலில் சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன.
அது மட்டுமல்லாமல் பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும் சில பேச்சுவார்த்தையின் மூலமாகவும் இணைக்கப்பட்டது. இவ்வாறு படைகளின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தது. காஷ்மீர், ஹைதராபாத் மற்றும் திருவாரூர் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுப்பு தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து ராணுவத்தை அனுப்பி அந்த பகுதிகளை இந்தியாவுடன் படையல் இணைத்தார்.
இவ்வாறு தற்போதுள்ள ஒரே இந்தியா உருவாகுவதற்கு இவர் காரணமாக இருந்ததால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிறார். இதனாலையே இவரின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போதும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது .