மழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

Photo of author

By Pavithra

மழைக்கால நோய் அனைத்திற்கும் ஒரே தீர்வு!!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!

மழைக்காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற மழைகால நோய்கள் அனைத்திற்கும் இந்த ஒரு டீ நல்ல தீர்வாக அமையும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் மாத்திரை மருந்து வேண்டாம் மருத்துவமனை செலவும் மிச்சம்.

இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்!

சுக்கு- அரை விரல் அளவு

பனங்கற்கண்டு-தேவைக்கேற்ப

துளசி – 10-15 இலைகள்

கறிவேப்பிலை – 10 – 15 இலைகள்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

மஞ்சத்தூள் -ஒரு பின்ச்

மாதுளம் பழம் தோல் -சிறிதளவு

சுக்கு துளசி கறிவேப்பிலை சீரகம் மஞ்சள் தூள் மற்றும் மாதுளம் பழம் தோல் அனைத்தையும் எடுத்து சிறிய பாத்திரத்தில் 250 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.நன்றாக கொதி வந்த பிறகு இதனை எடுத்து குடிக்கும் சூட்டிற்கு வந்தவுடன் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் மழைக்கால சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

குறிப்பாக சளி காய்ச்சல் மழைக்கால மந்தம் தலைவலி வயிற்று உபாதை தும்பல் இரும்பல் போன்ற பிரச்சனைகள் உங்களை நெருங்கவே நெருங்காது.

பனங்கற்கண்டு கிடைக்கவில்லை எனில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.