தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

0
175
National Unity Day 2022
National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி நம்முடைய நாட்டின் ஒற்றுமை,ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான உண்மையான மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை தாக்குவதற்கும் நமது தேசத்தின் உள்ளார்ந்த வலிமை மற்றும் மேம்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை இந்த நாள் வழங்கும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த உறுதிமொழி தேசிய ஒற்றுமை தினத்தான அன்று அரசு அலுவலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதாவது தேசத்தின் ஒற்றுமை, பொறுமை பாடு மற்றும் பாதுகாப்பை காக்க என்னை அர்ப்பணிப்பேன் எனவும் இந்த செய்தியை எனது சக நாட்டு மக்களிடையே பரப்பவும் கடுமையாக பாடுபடுவேன் எனவும் உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்படும். நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மற்றவர்களிடம் முரண்படுவதையோ, சண்டையிடுவதையோ தவிர்த்து அனைவரும் ஒரே தேசத்தின் மக்கள் என்று மனதில் நினைக்க வேண்டும் .

வாழ்க்கையில் முன்னேற ஒவ்வொரு மனிதர்களும் தேசப்பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமை இறை வளர்த்துக் கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.ஒரு இந்தியர் பெற்ற சாதனையை உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்தியர்கள் பெருமையோடு கொண்டாடும் விதம் அவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டியிருந்தது. இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.