பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது .
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்பொழுது அவர் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனவே, இதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கவேண்டும் .
கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பை முன்னதாகவே அறிவிக்கவேண்டும்.என்று கூறினார் .
மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் பழுதடைந்த சுவர்களை கண்டறிந்து அவற்றை உடனே நீக்கவேண்டும் என்றும், வாட்ஸ் ஆப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம் மூலம் வரும் தகவல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்