இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த தனுஷ்கா குணதிலகா சிறையில் அடைப்பு
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
தற்போது நடந்து கொண்டு இருக்கும் T20 உலக கோப்பை தொடரில் கிரிக்கெட் கவுன்சில் முலம் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தார். அப்போது காயம் ஏற்பட்டு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் இலங்கை திரும்பாமல் தன் அணிக்காக அங்கேயே இருந்து உற்சாகம் அளித்து வந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியால் சோகத்தில் இருந்த அந்த அணிக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்தது. சிட்னி போலீஸ் தனுஷ்கா குணதிலகாவை கைது செய்தது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காரணம் தெரியாமல் சகவீரர்கள் குழம்பி போனார்கள் .சிட்னி போலீஸிடம் விசாரித்ததில் இவர் டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணிடம் பழகி வந்துள்ளார் என்று தெரிய வந்தது .
கடந்த 2 ஆம் தேதி ரோஸ் பே நகரில் ஒரு தனியர் விடுதியில் சந்தித்து அந்த பெண் இடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று அந்த பெண் புகார் செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து உள்ளோம் என்று தகவல் தெரிவித்து உள்ளனர் .
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குணதிலகா சிறையில் இருந்தவாறு இன்று டவுணிங் சென்டர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு ஜாமின் வழக்க மறுப்பு தெரிவித்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு வழங்கினர் .