சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!

0
156
The DMK government neglected the road work! Respond to the boy's death.. Relatives protest!
The DMK government neglected the road work! Respond to the boy's death.. Relatives protest!

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி.இவர் விவாசாயம் செய்து வருகின்றார்.இவருடைய மனைவி விஜயகுமாரி,இவர்களுக்கு வினோத் என்ற 11 வயதில் மகன் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார் .

மேலும் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையை ,சென்னை கன்னியாகுமாரி விரைவு சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிக்காக விஜயமாநகரம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இந்நிலையில் நீண்ட நாட்களாக அந்த பணி நடைபெறாமல் அப்படியே இருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது.அந்த வகையில் அந்த பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நிழற்கூடம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது.

அப்போது அந்த வழியாக வீட்டிற்கு சென்ற சிறுவன்  வினோத் அந்த பள்ளத்தில் தவறி  விழுந்துள்ளான்.அருகில் யாரும் உதவிக்கு இல்லாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.மேலும் சிறுவன் உயிரிழந்தது குறித்து அவருடைய பெற்றோர் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை பார்த்து கதறி அழுதனர்.மேலும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பயணியர்  நிழற்கூடம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் பணியை விரைந்து முடிக்காமல் இருந்ததும்.அந்த பள்ளத்தை சுற்றி பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்காததே இந்த சம்பவத்திற்கு காரணம் என சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் மங்கலம்பேட்டை போலீசார் சிறுவனின் உறவினர்களை சமாதனப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Previous articleநாட்டில் புதிதாக 811 பேருக்கு நோய் தொற்று பரவல்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
Next articleராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!