இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்! வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்!
கடந்த மாதம் முதல் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கடந்த வாரம் ஒரு சில இடங்களில் மிக கனமழை மற்றும் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்தது அதன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.அதிலும் குறிப்பாக வட சென்னை பகுதியில் அதிக இடங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் நின்றது.அவ்வாறு தண்ணீர் செல்லாமல் நிற்பதற்கு காரணம் ஓட்டேரி நல்லா கால்வாயில் முறையாக தண்ணீர் செல்லாத காரணத்தால்தான் அந்த பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் அந்த கால்வாயை தொடர்ந்து தூர்வார சென்னை மாநகாரட்சி முடிவு செய்தது.இதுதொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.அந்த பணிகளை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என அனைவரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அந்த ஆய்வின் பொழுது ஓட்டேரி நல்லா கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் செல்வது தடைபடுகின்றது என்பது தெரியவந்தது.மேலும் இன்று பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் சென்னை மாநகாரட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் பேசப்பட்டது.அப்போது மாநகாரட்சி திடக் கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகளிடம் கூடுதல் தலைமை செயலாளர் ஓட்டேரி நல்லா கால்வாயில் குப்பைகளை கொட்டுவது குறித்து கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் கூறிய மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்படும் என கூறினார்.