மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

0
150

மாற்று திறனாளி என்றெல்லாம் பாரபட்சம் கிடையாது! மனிதாபிமானமற்ற திமுக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ,வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளத்துடன் கூடிய 1,771 நகர பேருந்துகள் கொள்முதல் செய்ய அக்டோபர் பத்தாம் தேதி டெண்டர் கேட்கப்பட்டது.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பேருந்துகள் வாங்குவதற்கு பதில் 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகள் வாங்க டெண்டர் கேட்டது சட்டத்திற்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.

மேலும் மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டத்துக்கு எதிராக உள்ள இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றது.கடந்த 2021 ஆம் ஆண்டு இதுபோன்ற பேருந்துகள் வாங்க டெண்டர் கேட்ட போது அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்டப்படி பேருந்துக்களை வாங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.

மேலும் 900மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகள் ஏற முடியாது என்பதால் 1,107 பேருந்துகள் வாங்க கேட்கப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை  தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவிற்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
Next articleசசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!