மகள் தந்தை பாசத்திற்கு இளம் குழந்தை நரபலி! டெல்லியில் நடந்த விபரீதம்!
டெல்லியின் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண் jஒருவர் தந்தையின் மீது அதிக அன்பு வைத்துள்ளார்.அவரது தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.இறந்த தந்தையை உயிருடன் கொண்டுவர ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.அதில்,இரண்டு மாதம் ஆன பெண் குழந்தையை நரபலி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.இவரும் அவர் பேச்சை கேட்டு இரண்டு வயது குழந்தையை கடத்தி உள்ளார்.
குழந்தையை பறிகொடுத்த குழந்தையின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தனர்.அதனையடுத்து குழந்தையை பற்றி போலீசார் விசாரனை நடத்தி வந்துள்ளார்கள். குழந்தை கடத்தப்பட்ட அறிந்த காவல்துறையினர் அந்த பெண் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்த போது நரபலி குடுப்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. அதை தடுத்து அந்த இரண்டு மாத குழந்தையை கைப்பற்றி போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு அந்த பெண்ணை கைது செய்து விசரித்த போது இறந்த தந்தையை உயிருடன் கொண்டுவர ஒருவர் கூறிய ஆலோசனையை கேட்டு இந்த திட்டத்தை நடைமுறை படுத்தியதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.