வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

0
138

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

சனிபகவான் என்பவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவர். மேலும் இவர் நாம் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை மட்டுமே தருவார். ஜோதிடத்தில் ராசி என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது ராசி மாற்றங்களுக்கும் அதில் ஏற்படும் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சனி திசை நடைபெறும்.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் கிரகமாவார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறைந்தது இரண்டரை வருடங்கள் ஆகும் அதே நேரத்தில் ஒரு ராசியில் அவரது தனது ராசி சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில் ஒவ்வொரு நபருக்கும் அவரவர்களின் வாழ்க்கையில் ஏழரை நாட்டு சனி அல்லது சனி, தசையை கடக்க வேண்டும். இந்த வகையில் சனிபகவான் தற்போது மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

அவர் வரப்போகும் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் அவரது இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும். சனிபகவான் ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு 8.2 மணி அளவில் மகராசி இலிருந்து கும்ப ராசிக்கு மாற்றம் அடைகிறார்.

இந்த மாற்றத்தினால் மிதுனம் மற்றும் துலாம் ராசிகளுக்கு சனி திசையின் தாக்கம் குறையும். மேலும் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள் சனி மாற்றத்திற்கு பிறகு இந்த மூன்று ராசிக்காரர்களும் பலவிதமான சிக்கல்களில் இருந்து விடுபட்டு பல நன்மை பலன்களை பெறுவார்கள்.

சனிபகவானின் இந்த மாற்றத்திற்கு பிறகு மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும் மேலும் மகர மற்றும் கும்ப ராசி ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும் கடகம் மற்றும் விருச்சக ராசியில் சனி தசை தொடங்கும் இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .

Previous articleசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இந்த இரண்டு சாற்றை மட்டும் குடித்து வாருங்கள்!
Next articleதொடர் கனமழையின் எதிரொலி! இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!