மீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி!
இந்திய அணியில் தோனிக்கு ஒரு புதிய பொறுப்பு கொடுக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளுக்குப் பிறகு, பிசிசிஐ, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படும் எம்எஸ் தோனியிடம் உதவி பெற தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, இந்திய டி20 அமைப்பில் ஒரு பெரிய பாத்திரத்திற்காக எம்எஸ் தோனிக்கு பிசிசிஐ அனுக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள தகவல்களின் படி 3 வடிவங்களிலான அணியை நிர்வகிப்பதற்கான சுமை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு மிகவும் தேவைப்படுவதாக பிசிசிஐ உணர்கிறது. அதே காரணத்தால், பயிற்சியாளர் பதவிகளை பிரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. எம்.எஸ். தோனியை மிகக் குறுகிய வடிவிலான ஆட்டத்தில் ஈடுபடுத்தவும், அவரது திறமைகளைப் பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தவும் வாரியம் ஆர்வமாக உள்ளது. இதனால் டி 20 அணிக்கு அவரை இயக்குனராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021 டி20 உலகக் கோப்பையின் போது, எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரால் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தர முடியவில்லை. ஏனெனில் அணி தொடக்கச் சுற்றிலேயே வெளியேறியது. இருப்பினும், பிசிசிஐ பெரியதாக கருதுகிறது.
இதற்கிடையில் தோனி அணியில் வீரராக இணையப் போவதாக தவறான தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன.