ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

0
154
Good news released by the railway! Travelers excited!
Good news released by the railway! Travelers excited!

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.மேலும் முதியவர்கள் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணமுற்றோர் என அனைவரும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ரயில் பயணம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள குறிப்பில் கூறப்பட்டதாவது.

ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகள் ,நீரழிவு நோயாளிகள் ,மற்றும் கைக்குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏற்றவாறு உணவு வகைகள் அனைத்தும் மேம்படுத்தப்படவுள்ளது.

அதனையடுத்து இந்த உணவு வகைகளில் பண்டிகை கால உணவுகள் ,பருவகால சுவையான உணவுகள் மற்றும் அவரவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற உணவு பொருட்கள் உள்ளடங்கும்.இந்த உணவுகளில் ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் தாயாரிப்புகள் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகள் தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்படும்.

அந்த உணவுகள் குறித்த நேரத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட இருகின்றது.மேலும் இந்த புதிய உணவு வகைகள் ரயிலில் பயணிகளுக்கு புதிய அனுபவம் ஒன்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!
Next articleஇது போன்ற கோமாளித்தனத்தை இதுவரையில் பார்த்ததில்லை! பால் விலை உயர்வு தொடர்பாக அண்ணாமலை விலாசல்!