இந்த விமான நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம் விதித்த அமெரிக்க போக்குவரத்து துறை! பயணிகளிடம் இருந்து எழுந்த புகார்!
அமெரிக்க போக்குவரத்து துறை நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முதல் விமானம் ரத்து செய்தது.அதற்கு பதில் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கவில்லை என அமெரிக்க பயணிகளிடம் இருந்து அமெரிக்க போக்குவரத்துத் துறைக்கு புகார்கள் வந்தது.
அந்த புகாரில் ஏர் இந்தியா நிறுவனம் மீது 1000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.கட்டணத்தைத் திருப்பி கேட்டு விடுக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அந்த நிறுவனம் மூன்று மாதங்களுக்கு மேல் எடுத்து கொண்டது என கூறப்படுகின்றது.
அதனைதொடர்ந்து அமெரிக்க பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலர்களை திருப்பி செலுத்த வேண்டும் என அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த மிக தாமதம் ஏற்பட்டதால் அந்த நிறுவனத்திற்கு 1.4 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.