அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்? பாடல் வரிகள் மூலம் வெதர்மேன் கொடுத்த சில் அப்டேட்!

0
86

பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதிலும் மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டமே மழையால் ஸ்தம்பித்து வருகிறது. அத்துடன் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டிருக்கிறார்கள். மேலும் அந்தப் பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக மழை முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் நிம்மதியில் இருந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில் மழை சற்றே இடைவேளை விட்டிருக்கின்ற சூழ்நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. ஆகவே வானிலை தொடர்பாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பணிபுரிவு தொடர்பாகவும் பல தகவல்களை வழங்கி உள்ளார்.

அதில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இது தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்த அப்டேட்டை பாடல் வரிகள் மூலமாக குறிப்பிட்டுள்ளார் வெதர்மேன்.

பனி விழும் மலர்வனம், உன் பார்வை ஒருவரம், பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் என்று குறிப்பிட்டு அவர் சமூக வலைதள வாசிகளின் விருப்பங்களை குவித்து வருகிறார்.

வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அரபிக் கடல் நோக்கி சென்றது இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ் பகுதியில் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.