முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

0
147

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது இந்த பொது தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியதாக இருக்கின்ற திமுக, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அதிலும் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது.

அந்த விதத்தில், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக வரையில் அந்தந்த கட்சி தலைமைகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரையில் எல்லிஸ் நகர் பகுதியில் நடந்த வாக்குச்சாவடி கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்றுக் கொண்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அந்த கூட்டத்தில் உரையாற்றிய ராஜன் செல்லப்பா முதலமைச்சரோடு அமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கு இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், பொன்முடி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரின் பேச்சு மக்கள் முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது.

திமுகவின் அமைச்சர்களுடைய செயல்பாடுகளை முதல்வரால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜன் செல்லப்பா. அதிமுக இரண்டாக உடைந்து விட்டது, நான்காக உடைந்து விட்டது என்று பேசி வருகிறார்கள். ஆனால் இன்று திமுகவை பொருத்தவரையில் துரைமுருகன், சபரீசன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்று 7 துண்டுகளாக உடைந்து விட்டது.

இந்த மோசமான ஆட்சி எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் என்று தெரியவில்லை. திமுகவை வீழ்த்த வேண்டாம் அதுவாகவே விழுந்து விடும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி யாருக்கு இணையாக தமிழகத்தில் எந்த தலைவரும் இல்லை. தன்னுடைய உழைப்பின் காரணமாக இன்று உயர்ந்திருக்கிறார். ஆனால் ஸ்டாலின் கருணாநிதி பெயரை வைத்துக் கொண்டுதான் அவரால் வளர முடிந்தது என்று தெரிவித்துள்ளார் ராஜன் செல்லப்பா.

மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு முதலமைச்சர் பேண்ட், சட்டை அணிந்து கொண்டு சென்று பார்வையிட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிலத்தில் இறங்கி ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இன்று மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். பால்விலையை அதிகரித்து விட்டார்கள், மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டார்கள், அம்மா உணவகத்தை மூடி விட்டார்கள்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை கூட திமுக விட்டு வைக்காமல் மூடி வைத்திருக்கிறது.இதே போல காவல் நிலையம் அருகே படுகொலை நடந்து சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடாக இருக்கிறது. நிதிகளை அதிகரிக்காமல், விலைவாசி உள்ளிட்டவற்றை அதிகரித்து லாப நோக்கத்தோடு திமுக செயல்படுகிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார் ராஜன் செல்லப்பா.

Previous articleமானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!
Next articleரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை!