மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
புதுச்சேரியில் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்கவில்லை.
அதனால் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில் நுட்ப கல்வி இயக்குனரத்தை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டத்தில் தாகூர் கலைக் கல்லூரி ,கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி ,லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
மேலும் கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் தினந்தோறும் தனியார் பேருந்துக்களில் தான் வருகின்றனர்.அதனால் அவர்களுக்கு ரூ 50 செலவு செய்து வருவதாக கூறினார்கள்.
அதனை அடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மாணவர்களிடம் அடுத்த 20 நாட்களுக்குள் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தார்.அதன் பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு தற்போது ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்து இயக்குவதற்கு பதிலாக இலவசமாகவே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்து 36 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.மீதம் 39 பேருந்துகள் இருக்கின்றது.அவை அனைத்தையும் சரிபார்த்து அனுமதி வழங்கிய பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.