பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

0
152

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

தமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகவும், மற்ற சிறுபான்மையினர் மதங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இதிலும் குறிப்பாக திமுகவின் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த விமர்சனங்களை எல்லாம் உண்மையாக்கும் வகையில் தான் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதாவது கடந்த காலங்களில் சிறுபான்மை மதத்தினருக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக திமுக தலைமை குரல் கொடுக்கும்.

ஆனால் அதே சிறுபான்மை மக்களால் மற்ற பிரிவை சார்ந்தவர்கள் பாதிக்கப்படும் போது அதை கண்டு கொள்வதுமில்லை அல்லது கண்டிக்கவும் துணிவதில்லை திமுக தலைமை. கடந்த காலங்களில் சிறுபான்மையினர் கொண்டாடும் கிறிஸ்துமஸ், இஸ்லாம் மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவர்கள் இந்து மத பண்டிகையான தீபாவளி,சரஸ்வதி பூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.

இவ்வாறு இந்துக்களின் பண்டிகைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் திமுக தலைவர் பொங்கல் விழாவை மட்டும் தமிழர்கள் விழா என்ற பெயரில் கொண்டாடியுள்ளார்.இந்நிலையில் இந்த விழாவை கொண்டாடியதிலும் ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதாவது சில தினங்களுக்கு முன் சென்னை கொளத்தூரில் உள்ள அனித அச்சீவர்ஸ் அகாடமி வளாகத்தில் அப்பகுதியிலுள்ள திமுகவினரின் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நடந்தது. இதில் கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பொங்கல் பரிசை வழங்கிய துர்கா ஸ்டாலின் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு பொங்கல் பரிசை வழங்கிய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கண்ட எதிர்க்கட்சியினர் பொங்கல் விழாவிலும் ஸ்டாலின் தன்னுடைய அரசியல் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் திமுக தலைவர் எது செய்தாலும் சர்ச்சையாகி வருவது அவரது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் சும்மா இருந்தால் கூட போதும் என பலர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

Previous articleமருத்துவர் ராமதாஸ் கூறும் உலகின் எட்டாவது ஒன்பதாவது பத்தாவது அதிசயம்
Next articleமுருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !