ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

0
239
Protest at Erode Government Hospital! Patients suffer a lot!
Protest at Erode Government Hospital! Patients suffer a lot!

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் நாள்ளொன்றுக்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 ஆயிரம் மட்டும் வழங்கி வருகின்றது.

அதனால் அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வார விடுமுறை மற்றும் ஓய்வு அறை போன்றவைகள் வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கலைந்தது.இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் பிறகு அறிவித்தபடி ஊதியத்தை முறையாக வழங்கவேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூன்றாவது நாளாக இன்று  ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடந்து வருகின்றது.இவ்வாறு இவர்கள் போராட்டம் செய்து வருவதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!
Next articleதிரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!