மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர் அனைவரும் நேரடி வகுப்பிற்கு செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டனர்.
இந்த வாரமும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. மேலும் கனமழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
இவ்வாறு அதிகளவு விடுமுறை விடுவதால் பாடங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றது என ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.மேலும் டிசம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கப்பட இருக்கின்றது. அ
தனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வரும் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வழக்கபோல் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.குறிப்பாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாது.6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.