நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ,நடிகைகள் ,மேலும் அவர்கள் விரும்பும் படங்களை வைத்துள்ளனர்.அதனால் விபத்து ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் தகவல் கொடுப்பதற்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இவை சட்டத்தை மீறும் செயலாக உள்ளது. இவ்வாறு சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு விதிமுறைகளின் படி மட்டுமே வாகனங்களின் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.உடனடியாக இதனை அமல் படுத்த வேண்டும்.
மேலும் போக்குவரத்து வாகன அதிகாரிகள் ,ஆய்வு மேற்கொண்டு நம்பர் பிளேட்டில் நடிகர்களின் படமோ அல்லது தலைவர்கள் படமோ அல்லது அரசு விதிமுறைகளை மீறிய எழுத்துக்களோ இருந்தால் அதனை உடனே அகற்ற வேண்டும். மேலும் அதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்து ,பறி முதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.