40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

Photo of author

By Anand

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று இரவு கொடுங்கை யூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சொகுசு கார் ஒன்று கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை வழிமறித்த போலீசார் சோதனை செய்தனர். கார் டிக்கியில் சோதனை செய்த போது அதில் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் கத்தி, துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடை ந்த போலீசார் காரில் இரு ந்த நபர்களை பிடிக்க முற் பட்ட போது காரில் இருந்த இரண்டு நபர்களும் இறங்கி ஓட ஆரம்பித்தனர்.

குப்பைமேடு உள்ளே சென்று அங்கிருந்த கட்டிட த்தில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க சென்ற போது நிலை தடு மாறி மேலே இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

உடனடியாக கொடுங்கையூர் போலீசார் அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவர்களிடம் அங்கு விசார ணை செய்தபோது கொடு ங்கையூர், எருக்கஞ்சேரி, சூழல்புனல்கரை பகுதி யைச் சேர்ந்த பிரகாஷ் என் கின்ற வெள்ளை பிரகாஷ் வயது 31 என்பதும் அவருடன் வந்த மற்றொரு நபர் செங்குன்றம் வடகரை அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த அப்பு என்கின்ற விக்ரமாதித்தன் வயது 37 என்பதும் தெரிய வந்தது.

இதில் வெள்ளை பிரகாஷ் மீது மூன்று கொலை உள்ளி ட்ட 10 க்கும் மேற்பட்ட வழக் குகள் உள்ளன. விக்கிரமா தித்தன் மீது கடத்தல் வழ க்கு உள்ளிட்ட சில வழக் குகள் உள்ளன.நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி, கத்திகளுடன் ரவுடிகள் கைது செய்யப் பட்ட தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2015 ஆம் ஆண்டு தாமரை ப்பாக்கம் கூட்ரோடு பகுதி யில் தென்னரசு என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார்.இந்த கொலை வழ க்கில் வெள்ளை பிரகாஷ் என்பவர் சம்பந்தப்பட்டிருந்தார்.

இதனால் உயிரிழந்த தென்னரசுவின் தம்பி புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாம் சரவணன் என்பவருக்கும் வெள்ளை பிரகாஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் பாம் சரவணன் உள்ளிட்ட நபர்கள் தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்று எண்ணி வெள்ளை பிரகாஷ், பாம் சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களு க்கு சென்று அவருக்கு ஸ்கெட்ச் போட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னைக்கு வந்து தனது நண்பர்களை பார்த்துவிட்டு கொடுங்கையூர் வழியாக செல்லும் போது வாகன சோதனையில் சிக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வெள்ளை பிரகாசுக்கு கை மற்றும் கால் உடைந்தது.இதேபோன்று அவருடன் வந்த விக்ரமாதித்தனுக்கு கால் உடைந்தது.இருவரும் தற்பொழுது ஸ்டான்லி மருத்துவ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது காரை முழுவதுமாக சோதனை செய்ததில் 40 நாட்டு வெடிகுண்டு கள், 40 அருவாள் மற்றும் கத்திகள், ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.