முதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ!
கோவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். இதனை மையமாக வைத்த திம்மன் பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீஸ் உடைய அணிந்த வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி லைசன்ஸ் மற்றும் இதர ஆவணங்கள் இல்லாதவர்களிடம் நூதன முறையில் பணத்தை வசூல் செய்துள்ளனர்.
அச்சமயத்தில் அவ்வழியே ஒருவர் சென்றுள்ளார். அவரிடமும் இந்த போலி காக்கி சட்டை,பணம் வசூல் செய்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர், கருத்தம்பட்டி காவல் நிலையத்தில் இவ்வாறு நூதன முறையில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர் எனக் கூறி புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்து நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது மோசடி புகார் வழக்கு போட்டனர். இவர்கள் மூக்கன் பட்டியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இவர்கள் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டே அவ்வபோது, பணத்திற்காக இவ்வாறு போலி வேடம் அணிந்து பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.
மேலும் இதில் எஸ்ஐ ஆக போலீசார் வேடமணிந்த நபர், பெண் வீட்டார் இடமே நான் எஸ் ஐ எனக் கூறி திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். மேலும் வாகன சோதனையில் எஸ்ஐயாக வளம் வந்த அவரது புல்லட் மற்றும் இவர்கள் அணிந்த போலீஸ் உடைய ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இவ்வாறு நூதன முறையில் பணம் மோசடி செய்தது குறித்து அப்பகுதி பரபரப்பில் காணப்படுகிறது.