போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

0
167

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும்.

இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.கீழ் கண்ட வழிமுறைகளை காவல்துறையினர்பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்படி,

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது. அதற்கு பதிலாக கு.வி.மு.ச பிரிவு 41 படி சம்மன் அனுப்பி எதிர் மனு தாரரை விசாரணை செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

முக்கிய வழக்குகளில் இறுதி அறிக்கையில்னை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !
Next articleபேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!