கருப்பை நீர்கட்டிகள் ஆபத்தானதா? காரணங்களும், அறிகுறிகளும் !

0
113

சில கருப்பை நீர்கட்டிகள் 2 முதல் 3 மாதங்களுக்குள் மறைந்துவிடும் ஆனால் சில கட்டிகள் அரிதாக மறையாமல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பைபர் சமீபத்தில் கருப்பை நீர்கட்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த செய்தி திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே கருப்பை நீர்கட்டிகள் அவ்வளவு ஆபத்தானது தானா? இது எதனால் ஏற்படுகிறது? இந்நோயின் அறிகுறிகள் என்ன? என்று இந்த பகுதியில் பார்க்கலாம். பொதுவாக கருப்பை நீர்க்கட்டிகள் என்பது திரவம் அல்லது திடப் பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு பை ஆகும், அவை ஒன்று அல்லது இரண்டு கருப்பைகளிலும் உருவாகலாம். கருப்பை நீர்கட்டிகள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சில சமயம் இவை புற்றுநோயாக மாறிவிடும் அபாயம் உள்ளது, சில நீர்கட்டிகள் 2 முதல் 3 மாதங்களுக்குள் மறைந்துவிடும் ஆனால் சில கட்டிகள் அரிதாக மறையாமல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். நீர்க்கட்டிகள் 7 செ.மீ.க்கு மேல் இருந்தால் அல்லது மெல்லிய சுவரை கொண்டிருந்தாள் அது செப்டிக் ஆகிவிட வாய்ப்புள்ளது.

கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான அறிகுறிகள்:

பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள் எவ்வித அறிகுறியினையும் வெளிப்படுத்துவதில்லை, இருப்பினும் சிலருக்கு இடுப்பு வலி மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. காரணமில்லாமல் இதுபோன்ற வழிகள் ஏற்பட்டால் பெண்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ள வேண்டியது அவசியம்.

கருப்பை நீர்க்கட்டி உருவாவதற்கான காரணங்கள்:

கருப்பையில் அசாதாரண செல் உற்பத்தி, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது இடுப்பு அழற்சி மற்றும் அண்டவிடுப்பு போன்ற பல காரணங்கள் கருப்பை நீர்கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

author avatar
Savitha