அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

காப்பீட்டு தொகையை பெறுவதற்கு நாமினி பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டில் பலவகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளது, பொதுவாக காப்பீட்டு திட்டடங்கள் நமது எதிர்கால நிதி தேவைக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைகின்றது. வங்கிகள் அல்லது பல நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்களை நமக்கு வழங்குகிறது, இந்த நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அரசு வழங்கும் முதலீட்டு திட்டங்களில் நாம் முதலீடு செய்வது நிலையான வருமானம் மற்றும் பணத்திற்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. தற்போது மத்திய அரசு சிறந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது, அந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) ஆகும். இந்த திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும்.அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

இந்த PMSBY திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற்றுக்கொள்ளமுடியும், இதில் முதலீடு செய்த பாலிசிதாரர் விபத்தில் இறந்தாலோ அல்லது முற்றிலும் ஊனமுற்றாலோ அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும், அதேசமயம் பாலிசிதாரர் விபத்தில் பகுதியளவு ஊனமுற்றால், அவருக்கு ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இணைத்துக்கொள்ளலாம், இதில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் பல அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை வழங்குகின்றன, அதனால் நீங்கள் அந்த நிறுவனங்களுக்கு சென்றுகூட பதிவு செய்துகொள்ளலாம்.அரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!

பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது நாமினி காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கிக்குச் சென்று காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்கு பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆதார் அட்டை, நாமினியின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை பாலிசிதாரர் ஊனமுற்றால் அதற்கான மருத்துவமனை ஆவணங்களையும் ஆதார் அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பாலிசிதாரருக்கு விபத்து நடந்த 30 நாட்களுக்குள் காப்பீட்டு தொகையை நாமினி கோர வேண்டும்.

Leave a Comment