பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! 

Photo of author

By Parthipan K

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை!

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.அதனால் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பது பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் ஆண்டுதோறும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இருந்து திருச்சி வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் 1,300 ரயில்வே போலீசார்,3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.இந்த பாதுகாப்பு பணியானது நாளை வரை நடைபெறும் என தெரிவித்தார்.