எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி தகவல்! இவர்களின் டுவிட்டர் கணக்கு நீக்கம்!
எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர்,அண்மையில் தான் இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர்.மேலும் இவர் ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார்.
அதனைதொடரந்து ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தையும் உயர்த்தினார். முன்பு ப்ளூ டிக் கணக்குகள் பெறுவது சற்று கடினமாக இருந்த நிலையில் தற்போது அவை சற்று சுலபமாக்கப்பட்டது.அதனால் போலி தகவல்கள் அதிகளவு பகிரப்பட்டது.
அதனால் ப்ளூ டிக் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.அதன் பிறகு ப்ளூ டிக்கில் க்ரே ,கோல்ட் ,ப்ளூ என மூன்று கலர்கள் கொண்டுவரப்பட்டது.அந்த கலர்கள் ஒவ்வொரு துறைக்கும் கலர் மாறுபடும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கு டுவிட்டர் குழுக்கள் அனைத்து கணக்குகளையும் சரிபார்த்து யாருக்கு எந்த செக் மார்க் வழங்க வேண்டும் என்று பிரித்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் டுவிட்டரில் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரக்டர் வரம்பில் 140 ஆக இருந்ததை 280 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது டுவிட்டரின் பங்களிப்பு அதிகரித்து வருவதால் கேரக்டர் வரம்பு 1000 ஆக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Twitter will soon start freeing the name space of 1.5 billion accounts
— Elon Musk (@elonmusk) December 9, 2022
இந்நிலையில் விரைவில் 150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.அதவாது பல ஆண்டுகளாக உள்நுழைவு இல்லாத கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.