கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

0
113
The case against Google! The Supreme Court fined!
The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது.

அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய கிஷன் கவும், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு அடாவடித்தனமாக உள்ளது.மேலும் பொது நல வழக்குகளின் மாண்பினை முழுமையாக அவமதிக்கும் வகையில் உள்ளது.மேலும் மனு தாரர்க்கு எந்த விளம்பரம் பிடிக்கவில்லையோ அதனை பார்க்காமல் தவிர்ப்பது அவருடைய பொறுப்புதான் என கூறினார்.

உங்களை திசை திருப்பும் விளம்பரத்தை பார்க்காமல் தவிர்ப்பது தான் சிறந்தது என கூறினார்கள்.அதற்கு பதில் இவ்வாறு பொதுநல மனுவை தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்ளது.இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது.

அதுமட்டுமின்றி மனுதாக்கல் செய்தவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தும் அந்த அபராத தொகையை அடுத்த நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மனுதாரர்க்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதனை தொடர்ந்து அந்த இளைஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.அதன்பிறகே அவருக்கு விதிக்கப்பட்ட தொகை ரூ 25,000 ஆக குறைத்து அவர் வீடு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

author avatar
Parthipan K