ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி!
உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதற்கு நேரடியான அல்லது முறையாக ஆதாரம் இல்லாத நிலையிலும் மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றத்தை அனுமதிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் ஏ.எஸ்.போபண்ணா ,வி.ராமசுப்பிரமணியன் ,பி.வி .நாகரத்னா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த வழக்கானது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய புகார் மீதான வழக்கு விசாரணை மனுதாரர் பி சாட்சியாக இருப்பவர்கள் மாறினாலோ அல்லது இறந்துவிட்டாலோ அல்லது அவருடைய வாய்மொழி மற்றும் ஆவண அடிப்படையிலான ஆதாரத்தை அனுமதிக்க முடியவில்லை என்றாலோ அப்போது உள்ள சூழ்நிலை ஆதாரத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க முடியும் என தெரிவித்தனர்.
நேரடி ஆதாரம் இல்லை என்பதை அரசு ஊழியர் மீதான விசாரணை தடைசெய்வதற்கு வாய்ப்பு எனவும் இல்லையெனில் குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான வாய்ப்பாகவோ கருத முடியாது என அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.