அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

0
102
AIADMK government got good results! Government employees great protest!
AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் இழப்புகள் அதிகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்காக தான் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் சேர்த்துள்ளனர்.தமிழகத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்றும் இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் தொடர்ந்து 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ஈடுப்பட்டனர்.CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக நடை பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அகில இந்திய நிர்வாகிகளோடு தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து இணைந்து போராட்டம் நடத்துவதற்கு பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதுபோல தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்த ஆலோசனை செய்யப்படும் என CPS ஒழிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்தது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து கட்டி பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஹிமாச்சல் பிரதேசம் மாநில ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.மேலும் முதல்வர் முக ஸ்டாலினிடம் பல்வேறு வகையான கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக ஆட்சியில் கூட இவ்வாறு பிரச்சனைகள் நடக்கவில்லை அரசு ஊழியர்களுக்கு பலன் கிடைத்தது.ஆனால் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என பேசப்பட்டு வருகின்றது.ஆனால் அவை நடைமுறையில் இல்லை.இதற்காக விரைவில் ஒரு முடிவை தமிழக அரசு வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

author avatar
Parthipan K