என்மீது போடப்படும் வழக்கு எல்லாம் துணிக்கடை கட்ட பை போல! போலீசாரை கிண்டல் செய்யும் டிடிஎப் வாசன்!
கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேந்தவர் செந்தில் இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் கட்டினார்கள். அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் ல் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர. அதற்காக கடலூர் பாராதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளதாக கூறி விக்னேஷ் மற்றும் செந்திலை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் கடந்த 14 ஆம் தேதி நடந்த அலுவலக திறப்பு விழாவிற்கு டிடிஎப் வாசன் கடலூர் வந்தார்.அவரை காண்பதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பைக்குகளில் கடலூர் புதுப்பாளையத்தில் திரண்டனர். அதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அந்த தகவல் அறிந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை.அதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள்.
மேலும் அனுமதி பெறாமல் கூட்டம் சேர்த்த காரணத்தால் டிடிஎப் வாசன், செந்தில்,விக்னேஷ் உள்ளிட்ட 300 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் போலீசார் பொய்யான காரணங்களை கூறி என்னுடைய ரசிகர்கள் மீது தடியடி நடித்துள்ளனர் என குற்றம்சாட்டினார் பிரபல பைக் ரைடர் மற்றும் யூடியூப் டிடிஎப் வாசன்.
https://twitter.com/18___48/status/1604873046069719049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1604873046069719049%7Ctwgr%5E693b80632a99c4a0f5912695a65fa3fd06598032%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.seithipunal.com%2Ftamilnadu%2Fttf-vasan-say-about-tnpolice
மேலும் இவ்வாறன வழக்குகள் எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல என கேலி கிண்டல் செய்து பேசியுள்ளார்.