2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

0
94
2000 notes no longer valid? Shocking information released!
2000 notes no longer valid? Shocking information released!

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர்.பயன்பாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்று வந்தனர்.ஆனால் அதனை அடுத்து வரும் மாதங்களாகவே மக்கள் அத்திப்படியான சிரமங்களை சந்தித்தனர்.

மேலும் புழக்கத்தில் இருந்த சுமார் 80% நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாது என அறிவித்தனர்.அதனால் நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் பொதுமக்களின் கைகளில் ரூ500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்று  கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும் மக்கள் வைத்திருக்கும் ஒருசில நோட்டுகளை மாற்ற பல மணி நேரம்  ஆனது.பலருக்கும் தங்கள் கைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு இருந்தும் அவசரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவானது.மேலும் புதிதாக ரிசர்வ் வங்கி 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

புழக்கத்தில் இருந்த 80% நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.பணப்புழக்க பிரச்சனையைச் சரி செய்ய அடுத்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகளை அதிகளவு அச்சடிக்க தொடங்கியது.ஆனாலும் பணப்புழக்கம் சரியாக சில மாதங்கள் ஆனது.மேலும் பணமதிப்பிழப்பு குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. 2000 ரூபாய் அதிகளவில் உள்ள நோட்டுகளாக அடிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.மேலும் கூடிய விரைவில் மத்திய அரசு ரூ 2000 நோட்டுகளை தடை செய்ய உள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளாகவே 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.அண்மையில் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் பெரும்பாலானவை 2000 ரூபாய் நோட்டுகள் தான் என கூறப்படுகிறது.2016 ஆம் ஆண்டு 2,272 ஆக இருந்ததும் ஆனால் வெறும் நான்கு ஆண்டுகளில் 2020 இல் இது 14,834 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மீண்டும் ரூ 1000 நோட்டுகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அந்த வீடியோ அண்மையில் அதிகளவு பரவி வருகின்றது.அதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என யோசிக்க தொடங்கி உள்ளனர்.

மேலும் மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக் விளக்கம் அளித்துள்ளது.அதில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளதாக 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று இணையத்தில் பரவி வரும் வீடியோ உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K