பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்! கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

0
161

பொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல்!
கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ!!

பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அடுக்கு மொழியில் அரசு விளம்பரம் செய்தாலும் ஒவ்வொரு வருடமும் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வயதானவர்கள் வேலை களைப்பு மற்றும் கவலை மறக்க குடித்த காலங்களை தாண்டி,

இன்று கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாக இருப்பது வேதனைக்குரியதாகும். தமிழகத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை மிக ஜோராக நடந்துள்ளது. 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மட்டும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போகிப் பண்டிகை நாளில் 178 கோடி ரூபாயும், பெரும் பொங்களன்று 253 கோடி ரூபாயும், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்களன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

தமிழகத்தில் எந்த விழா நடந்தாலும் அதில் மது இல்லாமல் நடப்பதே இல்லை. இந்த முறை அதிகபட்ச விற்பனையாக திருச்சி மண்டலத்தில் மட்டும் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மூன்றே நாட்களில் 605 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பிட்ட நாட்களில் அதிக வருமானம் ஈட்டுவதில் மதுக்கடைகளே முன்னிலை வகிக்கிறது.

Previous articleயார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
Next articleதோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?