ஆண்டிகள் சேர்ந்த ஓபிஎஸ் மடம் திமுக விற்கு தான் லாக்கி!- விமர்சிக்கும் ஜெயக்குமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொழுது அவர் கூறியதாவது,
விடியா ஆட்சி தமிழகத்திற்கு வந்தது முதல் மக்களுக்கு எதிரான பல விரோத செயல்கள் நடந்து வருகிறது. மேலும் மக்களுக்கு அளித்த வாக்குகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த சூழலில் மக்கள் முன்பு நடந்த ஆட்சியை நினைக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல தற்பொழுது உள்ள ஆட்சிமக்களுக்கு செய்யும் துரோகங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி நடைபெற போகும் பாராளுமன்றத்தில் வெற்றி வாகை சூட வேண்டும்.
இந்த ஆட்சி வந்தது முதல், மக்கள் சரிவையை சந்தித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு மேலும் ஓர் ஆண்டுகள் இருக்கும் நிலையில் தலைமை கழக நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி அவர்கள் அறிவுரை செய்து வருகிறார். அங்கிருந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் உட்கட்சி மோதல் பன்னீர்செல்வம் குறித்து கூட்டத்தில் ஏதேனும் பேசப்பட்டதா மேலும் கட்சி கொடி பயன்படுத்தக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து எல்லாம் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியதாவது, தற்பொழுது எங்களது நோக்கம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து ஆட்சி பெற வேண்டும் என்பதே, எனவே இச்சமயத்தில் உட்கட்சி பிரச்சனை என்பது எதுவும் இல்லை. அது மட்டுமின்றி ஓபிஎஸ் ஐ எங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் தற்பொழுது வரையும் உறுதியாக உள்ள நிலையில், ஓபிஎஸ்ஐ அடையாளம் காட்டியது தினகரனும் சசிகலாவும் தான் எனவே அவர்களுடன் கூட்டணி வைத்து திமுகவிலோ அல்லது இதர கட்சியிலோ செயல்படலாம்.
அதுமட்டுமின்றி ஓபிஎஸ் ஓர் ஆண்டிகள் சேர்ந்த மேடம்,அதனை நினைத்து டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை.எனவே அந்த மடத்துடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டோம்.
அதுமட்டுமின்றி ஓ பன்னீர்செல்வத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஒருபோதும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் வேரூன்றிடக்கூடாது என்பதால் தான் பல வேலைகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இடைக்கால பொதுச் செயலாளர் ஆக ஓ பன்னீர்செல்வம் அவர்களை கட்சி நிர்வாகம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இபிஎஸ் ஐ அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.இது குறித்து நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய நிலையில் அவர் எப்படி கட்சியில் இருக்கிறேன் என்று கூறிக் கொள்வார். அதனால்தான் கட்சி கொடி பயன்படுத்தக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினோம்.
அதுமட்டுமின்றி பொதுக்கூட்டத்தில், அதிமுக தலைமையில் தான் தேர்தலை எதிர்கொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து பாஜகவுடன் கூட்டணி என்ற முறையில் எதுவும் ஆலோசனை செய்யவில்லை. எனவே சிவி சண்முகம் கூறியது கூட்டத்தில் பேசப்பட்டதற்கு புறம்பானது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து யாராலும் உத்தரவிடவும் முடியாது. நாங்களாக தான் முடிவு செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த வகையில் பாஜக உடனான கூட்டணி இருந்தாலும் நாங்கள் வைப்பது தான் சட்டம் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார்.