தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

0
155

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

தஞ்சை பெருவுடையார் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்த கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் மரபு சித்தர்கள், தமிழ் பற்றாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசே! எங்கள் தமிழ்ப் பேரரசன் இராசராச சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில் தமிழர் மரபுப்படி திருக்குட முழுக்கை நடத்த வேண்டுமாறு ஆணையிடுக என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது சம்பந்தமாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் பல ஆண்டுகளாக உள்ள வழிபாட்டு நடைமுறையை உடனே எப்படி மாற்றுவது என்று கூறினார். தமிழில் குடமுழுக்கு நடந்த வேண்டும் என்பது குறித்து தமிழ் அறிஞர்களின் கருத்துகள் கேட்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

தஞ்சை கோயிலின் சிற்பம், கல்வெட்டு, அமைப்பு என தமிழனின் கட்டடக் கலையை இன்றும் உலகிற்கு பறைசாற்றுகிறது. மேலும் கோயிலின் சிறப்பு வாய்ந்த அம்சங்களும் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய பெருமை வாய்ந்த திருத்தலத்தில் தமிழில் வழிபாடு செய்யாமல் போனால் அது சரியானதாக இருக்காது என்று சமூக வலைதளம் மற்றும் பல்வேறு தரப்பில் கருத்து கூறப்படுகிறது. மேலும், தமிழ் குடமுழுக்கு வேண்டும் என்று டுவிட்டரில் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

Previous article175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !
Next articleயாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?