யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

0
225

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், திராவிடர் கழகத்தின் பெயரில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு பேரணி நடந்தது. அந்த பேரணிக்கு பெரியார் தலைமை தாங்கினார் என்றும், அதில் ராமர் மற்றும் சீதையின் உருவங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்ததாகவும் ரஜினி பேசியிருந்தார்.

இந்த சர்ச்சையான கருத்து தவறானது என்றும், நடைபெறாத ஒன்றை ரஜினிகாந்த் பேசுவதாக திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து காவல் நிலையங்களில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தனர். மேலும் இந்த விசயத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று திராவிட அமைப்புகள் அறிவித்தன.

இது சம்பந்தமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது: திராவிட கழகப் பேரணியில் ராமர் மற்றும் சீதையின் படங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்த ஆங்கில பத்திரிகை ஒன்றை காட்டினார். இந்த ஆதாரம் மற்றும் தான் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து உண்மையை பேசியுள்ளேன், அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று அதிரடியாக கூறினார்.

பேரணி குறித்து தகுந்த ஆதாரங்களுடன் இணையத்தில் திராவிட கழகத்தினர் பதிவு செய்வது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் சொல்கிறார்கள், நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வேகமாக தனது வீட்டின் உள்ளே சென்றார். ரஜினியின் தடாலடியான பேச்சு திராவிட பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்ததுபோல ஆகிவிட்டது.

Previous articleதஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!
Next articleபாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here