காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! இந்த நோய்கள் அனைத்தும் உடனே சரியாகும்!

0
148

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! இந்த நோய்கள் அனைத்தும் உடனே சரியாகும்!

எந்த ஒரு உயிராக இருந்தாலும் அதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்தான். அதனால் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்த உடனே டீ, காபி ,பால் குடிப்பதுதான் வழக்கமாக அனைவரும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் நாம் எழுந்தவுடன் காலையில் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அவ்வாறு குடித்த பிறகு அரை மணி நேரத்திற்கு வேறு எந்த ஒரு உணவையும் நாம் எடுத்துக் கொள்ள கூடாது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் உடல் சுத்தமாகும், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் உடலில் உள்ள கழிவுகள், நச்சுத்தன்மை சிறுநீர் மூலமாக நீங்கும். அதன் பிறகு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகம் சோர்வு மற்றும் தலைவலி இருப்பவர்கள் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்புகள் அனைத்தும் நீங்கி உடல் பருமனை குறைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்தில் தேவையற்ற கரும்புள்ளி பருக்கள் போன்றவைகள் ஏற்படாமல் இருக்க காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleஎன்னது பாலில் இந்த ஒரு பொருள் சேர்ந்தால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா??