மக்களே முந்துங்கள்! இன்றே கடைசி நாள் தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டயமாக்கபட்டுள்ளது.அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு கண்டுகொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அரசானது கால அவகாசம் வழங்கி வந்தது.
இதனை எதிர்த்து வந்த புகாரில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மின்சார மானியம் வழங்கப்படாது என அரசானது அறிவித்துள்ளது. ஆனால் இதற்கான விதிகள் எந்த சட்டத்திலும் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .மானியம் பெற ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில தொகுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான மனுக்களை விசாரித்து பிறகு நீதிபதிகள் அதனை ரத்து செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று தமிழக அரசு மின்வாரியங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் இந்த மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை கண்காணிக்கும் வகையில் பொறியாளர் ஒருவர் நியமனம் செய்ய வேண்டும்.
மின் நுகர்வோர் ஆதார் எண் இணைப்பு பணிகள் இடையில் நிறுத்தக்கூடாது.இந்த செயல்முறை பற்றி மக்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.ஆதார் இணைக்க வரும் மக்களுக்கு தேவையான அளவிற்கு இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் ஷாமியான பந்தல் அமைக்க வேண்டும்.மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் கணினிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.