பொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!
தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு ,பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது.மேலும் இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இணையவழியில் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி நடப்பாண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது.கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தேர்வர்கள் விண்ணபங்களை இணையவழியில் பதிவு செய்யலாம்.மேலும் இந்த விண்ணபங்களை பதிவு செய்ய காலவகாசமானது நாளை ஜனவரி 3ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.
அதனால் விருப்பம் உள்ள மாணவர்கள் விரைந்து உங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.நாளைக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய தவறும் மாணவர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் ஜனவரி 5,6,7 தேதிகளில் விண்ணபிக்கலாம்.ஆனால் அதற்கு அபாராதமாக ஆயிரம் செலுத்தினால் மட்டுமே விண்ணபிக்க முடியும்.மேலும் தேர்வுக் கட்டணம், கால அட்டவணை, வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.