புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!
கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் அந்த பெண் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.மேலும் தாய் மற்றும் மகள் இருவரையும் 15 நாட்கள் தனிமைபடுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்க சுகாதாரத்துறை அறிவித்தது.
அதனையடுத்து அவர்களுடன் பயணம் செய்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு அவரவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனை அடுத்து கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி தொழில் செய்து வருகின்றார்கள்.
சீனாவில் தொற்று வைரஸ் அதிகரித்து வருவதினால் உயிரிழப்பு விகிதம் அதிகரிகின்றது.அதனால் குடும்பத்துடன் சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தொற்று பாதிப்பினால் இறப்பு ஏதுவும் பதிவாகவில்லை என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.புதிய பாதிப்புகளுடன் சேர்த்து டெல்லியில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,007,237 ஆக உயர்ந்துள்ளது.