மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

0
239

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

நிலக்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நம் அதனை உட்கொள்வதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.

நிலக்கடலையில் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைபர், புரோட்டின், விட்டமின், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள அப்ப ஜிங்க் ஆகியவை நம் உடலில் கெட்ட கொழுப்புகளான எல்டிஎல் அளித்து எச்டிஎல் என்கின்ற நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது. நிலக்கடலையில் விட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இவை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. தசைகளின் வலிமைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் கொண்டவர்கள் அதிகம் நிலக்கடலை எடுத்துக் கொள்வதன் மூலமாக மன அழுத்த பிரச்சனைகள் குறைகிறது. உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

நிலக்கடலையை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் எலும்புகள் வலுவடைய உதவுகிறது .பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாறுபாட்டின் காரணமாக முடி உதிர்வு அதிகம் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி வேர்க்கடலை எடுத்துக்கொள்வதன் மூலமாக முடி உதிர்வு குறைகிறது. நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படக்கூடிய புற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

 

Previous articleமக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!
Next articleகொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்